இதற்காக தான் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை நடுரோட்டில் வைத்து போட்டு தள்ளினோம்! கைது செய்யப்பட்ட 11 பேர் பகீர்.!

First Published Jun 28, 2023, 7:46 AM IST

கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மதியழகன் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடலூர் அருகே தாழங்குடா பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (45). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மனைவி சாந்தி, தற்போது ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார். இந்நிலையில்,  மதியழகன் இன்று காலை கடலூர் மஞ்சக்குப்பம் சண்முகம் பிள்ளை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட கும்பலை பார்த்ததும் மதியழகன் ஓடினார். 

ஆனால், அந்த கும்பல் விடாமல் ஓட ஒட விரட்டி தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில், அவரது முகம் சிதைந்து கொடூரமாக கொல்லப்பட்டார். பின்னர், ஆயுதங்களை அங்கேயே போட்டுவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றது. பட்டப்பகலில் கொலையை கொண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக விஜய், அர்ஜுனன், முகிலன், குருநாதன், மணிகண்டன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

மதியழகன், மதிவாணன் என்பவருக்கும் ஊராட்சி மன்றத் தேர்லில் போட்டியிடுவது தொடர்பாக 2019-ம் ஆண்டிலிருந்தே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த சூழலில், கடந்த 2020-ம் ஆண்டு மதிவாணன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இருந்தவர் மதியழகன். இந்த வழக்கில் மதியழகன் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்த நிலையில்  மதிவாணனின் ஆதரவாளர்கள் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

click me!