சென்னை நெற்குன்றம் அபிராமி நகர் 10வது தெருவை சேர்ந்தவர் தீனா (28). இவரது மனைவி கலைவாணி (25). இவரது மைத்துனர் அசோக் (21). இவர்களிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் கலைவாணி, அசோக் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த அசோக் கலைவாணியை சரமாரியாக தாக்கி, கத்தியால் தலை மற்றும் கைகளில் சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்து வலியால் அலறி துடித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது கலைவாணி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்து அசோக் தப்பித்தார்.
இதனையடுத்து, கலைவாணியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அசோக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணியை மைத்துனர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.