தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி சாலையில் அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு விளையாட்டில் பயிற்சி பெறும் மாணவர்களுக்காக விடுதி செயலப்பட்டு வருகிறது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்கி, விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு அருகிலுள்ள அரசு பள்ளியில் படித்தும் வருகின்றனர். இந்நிலையில் இந்த விடுதியில் தங்கி படிக்கும் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவனை, பிளஸ் 2 படிக்கும் இரண்டு மாணவர்கள், 10வது மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என மொத்தம் 4 பேர் சேர்ந்து கடந்த சில மாதங்களாக ஓரினசேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.