விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சாலவனூர் கிராமத்தில் கடந்த 6ம் தேதி 100 நாள் வேலையில் பொதுமக்கள் ஏரிக்கரை வாய்க்கால் பகுதியில் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, வாய்க்காலை ஆழப்படுத்த பள்ளம் தோண்டியபோது இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கஞ்சனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை செய்து புதைக்கப்பட்ட பெண் 3 மாத கர்ப்பிணியாக இருந்ததும், அந்த பெண்ணிற்கு 17 முதல் 19 வயதிற்குள் இருக்கலாம் என்ற தகவல் போலீசாருக்கு தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் கண்டமானடியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி பிரியதர்ஷினி(17) என்பது தெரியவந்தது. விக்கிரவாண்டியை அடுத்த சித்தேரிபட்டியைச் சார்ந்த டிரம்ஸ் இசைக்கும் அகிலன் (23) என்பவரை காதலித்து வந்ததும் தெரியவந்தது. சென்னையில் தலைமறைவாக இருந்த அகிலனை கைது செய்து விழுப்புரம் அழைத்து வந்து அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதில், அகிலன், பிரியதர்ஷினியும் காதலித்து வந்ததுள்ளனர். அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் பிரியதர்ஷினியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால், பிரியதர்ஷினி 3 மாதம் கர்ப்பமானார். தான் 3 மாத கர்ப்பிணியானதையும், தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படியும் அகிலனிடம் பிரியதர்ஷினி கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அகிலன் பிரியதர்ஷினியை தனியாக வரவழைத்து கன்னத்தில் அறைந்து, கழுத்தை நெரித்து கொலை செய்து நண்பர்கள் உதவியுடன் வாய்க்காலில் புதைத்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த கொலை அகிலனின் நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.