உல்லாசத்துக்கு மறுத்த பெண்.. தலைக்கேறிய காமத்தால் 65 வயது கிழவன் செய்த செயல்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!

Published : May 12, 2023, 09:00 AM IST

உல்லாசத்துக்கு வர மறுத்ததால் 45 வயது பெண் கட்டையால் அடித்து கொலை செய்ததாக 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

PREV
14
உல்லாசத்துக்கு மறுத்த பெண்.. தலைக்கேறிய காமத்தால் 65 வயது கிழவன் செய்த செயல்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி வாசுகி அம்மையார் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி செல்வி (45). இவர் கால்நடைகளுக்கு தேவையான புற்களை அறுத்து கொடுக்கும் வேலையை செய்து வந்துள்ளார். வழக்கம் போல புற்களை அறுக்க வடபுதுப்பட்டி சென்ற செல்வி மீண்டும் திரும்பவில்லை. இதனால், பதறிப்போன குடும்பத்தினர் அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, செல்வியை போலீசார் தேடி வந்த நிலையில் புல் அறுக்க சென்ற மலைஅடிவாரத்தில் தலையில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். 

24

இதனையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். செல்வியின் கழுத்தில் இருந்த நகைகள் மாயமாகி இருந்தது. அவரது உடலில் காயங்களும் இருந்ததால் நகைக்காக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. 

34

இந்நிலையில் சருத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இருளப்பன்(62) என்பவருக்கும் செல்விக்கும் கடந்த 4 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால்,  அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்ட போது அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. நிலக்கோட்டை பகுதியில் பதுங்கி இருந்த  இருளப்பனை போலீசார் கைது செய்தனர்.

44

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில், எனக்கும், செல்விக்கும் கடந்த 4 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்தது. அடிக்கடி நாங்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருப்போம். இந்நிலையில், எனக்கு காசநோய் இருப்பதால் என்னை சந்திப்பதை செல்வி தவிர்த்து வந்தார். நேற்று புல் அறுக்க செல்வியை உல்லாசத்துக்கு அழைத்த போது மறுத்ததால் ஆத்திரத்தில் கட்டையால் அடித்துக் கொலைசெய்தேன் என்று தெரிவித்தார்.

click me!

Recommended Stories