திருமணம் நடந்து 15 வருடம் ஆச்சு.. ஒரு குழந்தை கூட இல்லை - மருமகளை விஷம் வைத்து கொன்ற மாமியார்

Published : May 09, 2023, 03:09 PM IST

திருமணமாகி 15 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்காததால், 33 வயது பெண்ணுக்கு அவரது மாமியார் விஷம் கொடுத்து கொன்றுள்ளார்.

PREV
14
திருமணம் நடந்து 15 வருடம் ஆச்சு.. ஒரு குழந்தை கூட இல்லை - மருமகளை விஷம் வைத்து கொன்ற மாமியார்

திருமணமாகி 15 வருடங்கள் கடந்த பிறகும், கர்ப்பம் தரிக்காததால் பெண்ணை கணவர் வீட்டார் விஷம் கொடுத்து கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேச மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சாலி பேகம் என்ற பெண்ணின் மாமியார் குழந்தை இல்லாததைக் கண்டித்ததாக கூறப்படுகிறது.

24

கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு, பேகம் தனது சகோதரனை உதவிக்கு அழைத்தார். அவரது மாமியார் விஷம் கொடுத்ததாகக் கூறினார். குழந்தை பிறக்காததற்காக அவளிடம் கணவன் அடிக்கடி தகராறு செய்தான் என்று கூறப்படுகிறது.

சகோதரியின் அழைப்புக்கு பிறகு அவளது சகோதரன் வீட்டிற்கு சென்றான். அப்போது அவர் ஆபத்தான நிலையில் இருப்பதைக் கண்டார். பிறகு சிராத்துவில் உள்ள ஒரு சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றார்.

34

அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர் என்று கூறப்படுகிறது. முகமதுவின் புகாரின் அடிப்படையில், கட தாம் காவல் நிலையத்தில், பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் நான்கு பேர் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, கவுசாம்பி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) சமர் பகதூர் சிங் தெரிவித்தார். 

 

44

இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருமணமாகி 15 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்காததால், 33 வயது பெண்ணுக்கு அவரது மாமியார் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..குஜராத்தில் 40 ஆயிரம் பெண்கள் மாயம்.. மனித கடத்தல், விபச்சாரத்துக்கு தள்ளப்படும் கொடுமை - என்சிஆர்பி தகவல்

Read more Photos on
click me!

Recommended Stories