கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பாதிரியர் பெனடிக்ட் ஆன்றோ (29). கடந்த சில நாட்களுக்கு பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இளம்பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பாலியல் ரீதியாக வாட்ஸ் அப் சாட்டிங் செய்து தொல்லை செய்ததாகவும், மிரட்டியதாகவும் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது லேப்டாப்பில் இருந்த பெண்களின் புகைப்படங்கள் வீடியோவை நான் வெளியிடவில்லை. நான் யாரையும் மிரட்டியும் வீடியோ எடுக்கவில்லை. அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் விரும்பாமல் எதையும் நான் செய்ததில்லை என கூறினார்.
nagercoil
வீடியோவில் நெருக்கமாக இருக்கும் பெண் தனது முன்னாள் காதலி என்றும் பாதிரியார் என்பதால் அவரை திருமணம் செய்ய முடியவில்லை. இருவரும் விருப்பப்பட்டு பிரிந்து விட்டதாகவும் கூறினார்.
அந்த பெண்ணுக்கு பாதிரியார் திருமணம் செய்து வைத்ததும் தெரியவந்தது. திருமணத்திற்கு பிறகும் பாதிரியாரும் அந்த பெண்ணும் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இதனிடையே ஒரு குடும்பத்தை சேர்ந்த தாய் மகள் மருமகள் என 3 பேரிடம் பாதிரியார் ஆபாச சேட்டிங்கில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பாதிரியார் கூறிய தகவல்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாதிரியாரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தங்களிடம் விசாரணை நடத்தி விடுவார்களோ என்ற பாதிரியாருடன் தொடர்பில் இருந்த பெண்கள் அச்சத்தில் உள்ளனர்.