illegal love
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இலங்கியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (60). இவரது மனைவி கொளஞ்சியம்மாள் (55). இவர்களது மகன் வேல்முருகன் (40) வெளிநாட்டில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கீதா (33). இந்த தம்பதிக்கு அகிலேஷ்வர் (12), சரவணகிருஷ்ணன் (6) என்ற மகன்கள் உள்ளனர்.
இவருக்கு ஹரிஹரன் (43) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த விவகாரம் மாமியார் மற்றும் மாமனாருக்கு தெரியவந்தது. வெளிநாட்டில் இருந்த தன்னுடைய மகன் வேல்முருகனிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கீதா, தங்களுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியார், மாமனாரை முள்ளங்கி சாம்பாரில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். இதில், பக்கத்து வீட்டுச் சிறுவன் நித்தீஸ்வரனும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மங்கலம்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் மூன்று பேரும் எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்டு இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து, ஒரு வருடத்திற்கு கொலை வழக்காக மாற்றி, கீதாவையும் அவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த ஹரிஹரனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.