50 வயதுடைய நபருடன் 28 வயது பெண் கள்ளக்காதல்.. இடையில் வந்த 55 வயது வைத்தி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்..!

First Published | May 25, 2023, 1:58 PM IST

கள்ளக்காதலை கண்டித்த நபர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தொடர்பாக கள்ளக்காதலி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

illegal love

கடலூர் மாவட்டத்தை அடுத்த பாலக்கரையை சேர்ந்த ஆறுமுகம் (50). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஆறுமுகம் விருத்தாசலம் பாலக்கரையில் பட்டாணி கடை நடத்தி வந்தார். 

illegal love

அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் மனைவி கவிதா(28). கருத்து வேறுபாடு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். ஆறுமுகத்தின் கடைக்கு வந்து சென்றபோது கவிதாவுக்கும், ஆறுமுகத்திற்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக கணவன், மனைவி போல் வீடு வாடகை எடுத்து பாலக்கரையில் உள்ள வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

Tap to resize

illegal love age

இந்நிலையில், தனது நண்பரான உளுந்தூர்பேட்டையை வைத்தி(55) என்பவர் ஆறுமுகத்தை பார்க்க வரும்போது கவிதாவுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தை அறிந்த ஆறுமுகம் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். மேலும், வைத்தியுடன் சேர்ந்து வாழ்ந்தார்.

இதனையடுத்து, ஆறுமுகம் சமாதானம் செய்து கவிதாவை தன்னுடன் வருமாறு அழைத்தார். இதனால், ஆறுமுகம், கவிதா, வைத்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆறுமுகம், கவிதா மீது பெட்ரோலை ஊற்ற முயன்றார். உடனே வைத்தியும், கவிதாவும் ஆறுமுகத்திடம் இருந்த பாட்டிலை பிடுங்கி அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.

இதனையடுத்து, இவரது அலறம் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வைத்தி, கவிதா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest Videos

click me!