வேறு வழியில்லாமல் பெற்ற மகள் என்று கூட பாராமல் தாயும், கள்ளக்காதலனும் சேர்த்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த சாக்கு மூட்டையை எடுத்து குழந்தையின் சடலத்தை கட்டி அருகில் இருந்த கிணற்றில் தூக்கி வீசியுள்ளனர். வீட்டிற்கு வந்த கணவர் மகள் காணவில்லை என்பதால் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.