வைக்க கூடாத இடத்தில் கை வைத்து தொட்டும், தடவிய பைக் டாக்ஸி ஓட்டுநர்! அதிர்ச்சி அடைந்த பெண்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

Published : Nov 10, 2025, 10:15 AM IST

பெங்களூருவில் பைக் டாக்ஸியில் பயணித்த பெண், ஓட்டுநரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். அந்தப் பெண் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, வில்சன் கார்டன் போலீசார் சம்பந்தப்பட்ட ஓட்டுநரைக் கைது செய்தனர்.

PREV
14
பைக் டாக்ஸி ஓட்டுநர்

பைக் டாக்ஸியில் பயணித்தபோது, ஓட்டுநர் பெண்ணின் தொடையில் கை வைத்து துன்புறுத்தியுள்ளார். நிறுத்தும்படி கேட்டும் அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். அந்தப் பெண் கண்ணீருடன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக வில்சன் கார்டன் போலீசார் அந்தபெண்ணிடம் இருந்து தகவல் பெற்று வழக்குப்பதிவு செய்தனர். தற்போது அந்த பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

24
உல்லால் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் கைது

பெண்ணிடம் முறையற்ற முறையில் நடந்துகொண்ட வழக்கில், வில்சன் கார்டன் போலீசார் உல்லால் பகுதியைச் சேர்ந்த லோகேஷ்(28) என்பவரைக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 6ம் தேதி மாலை வியாழக்கிழமை நடந்துள்ளது. விசாரணை நடத்திய போலீசார் குற்றவாளியைக் கைது செய்ததன் மூலம் ஒரு தெளிவான செய்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

34
நாடு தழுவிய விவாதத்தை ஏற்படுத்திய வழக்கு

பெங்களூரு சர்ச் தெரு அருகே பி.ஜி.யில் தங்கியிருக்கும் அந்த பெண், வேலை நிமித்தமாகச் செல்ல பைக் டாக்ஸி புக் செய்துள்ளார். சில நிமிடங்களில் வந்த பைக் ஓட்டுநர், பெண்ணை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். ஆனால், வழியில் பெண்ணின் தொடையில் கை வைத்து துன்புறுத்தத் தொடங்கியுள்ளார். மீண்டும் மீண்டும் பெண்ணின் தொடையைத் தொட்டும், தடவியும் வந்துள்ளார்.

44
அண்ணா, என்ன பண்றீங்க, நிறுத்துங்க

ஓட்டுநரின் தொல்லை தொடங்கியதும், அந்த பெண் நிறுத்தும்படி கூறியுள்ளார். "அண்ணா, என்ன பண்றீங்க, நிறுத்துங்க" என்று கேட்டுள்ளார். ஆனால், ஓட்டுநர் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார். சிக்னலில் பைக் நின்றபோது, அவர் தனது இரண்டு கைகளையும் பெண்ணின் தொடையில் வைத்துக்கொண்டு நின்றார். கடுமையான மன உளைச்சல் மற்றும் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட அந்த பெண், எதுவும் சொல்ல முடியாமல், எதிர்த்தால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற பயத்திலேயே பயணத்தைத் தொடர்ந்தார். தொல்லை அதிகமானதும், மொபைல் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து உடனடியாகச் செயல்பட்ட போலீசார், ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தியதில் தனது உடலில் பின்பக்கத்தில் அரிப்பு உள்ளது. உடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் எனது பின்பகுதியில் அரிப்பு எடுத்த இடத்தை தான் தொட்டேன். பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்று கூறினார். ஆனால் போலீசார் நம்பவில்லை.

Read more Photos on
click me!

Recommended Stories