இதனை கண்டித்த பிறகும் திருந்தாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5-ம் தேதி குடிபோதையில் வீட்டுக்கு வந்த செல்வராஜ் மாமியாருக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மனைவி டயானா மேரி மற்றும் மாமியார் இன்னாசியம்மாள் இருவரும் சேர்ந்து அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரில் மிளகாய் பொடியை கலந்து எடுத்து வந்து சற்றும் யோசிக்காமல் செல்வராஜ் மீது ஊற்றிவிட்டார். இதில் உடல் வெந்து செல்வராஜ் வலியால் அலறி துடித்தார்.