கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே என்.தட்டக்கல்லை சேர்ந்தவர் கந்தன் (35). டைல்ஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவர் சந்தியா(27) என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அடிக்கடி வேலை விஷயமாக கணவர் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார்.
இந்நிலையில், இரவு கந்தனின் வீட்டில் திடீரென அலறல் சத்தம் கேட்டது. இதனால், என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது, கந்தன் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் கந்தன் மனைவியிடம் போலீசார் பாணியில் விசாரணை நடத்திய போது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில்;- அடிக்கடி கணவர் வெளியூர் சென்றதால் சந்தியா வீட்டில் தனியாக இருந்தபோது பால் பாக்கெட் வாங்கி கொடுக்கும் சிவசக்தி (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரத்தை அறிந்த கணவர் கந்தன் மனைவியை கண்டித்தார். ஆனாலும், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் காதலை தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வெளியூருக்கு செல்வதாக கூறிவிட்டு கந்தன் சென்றதும் காதலன் சிவசக்தியை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். ஆனால் திடீரென இரவு 10 மணி அளவில் கந்தன் வந்துள்ளார். அப்போது, சந்தியா, சிவசக்தி இருவரும் உல்லாசமாக இருப்பதை பார்த்து
அதிர்ச்சி அடைந்த கந்தன் இருவரையும் கண்டித்தார். ஆத்திரமடைந்த கந்தன் மனைவியை கடுமையாக தாக்கினார்.
அப்போது, சிவசக்தியும், சந்தியாவும் மிளகாய் பொடியை கந்தனின் கண்ணில் தூவி வீட்டில் காய்கறிகள் வெட்டும் கத்தியால் கந்தனை சரிமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கந்தன் சரிந்து விழுந்தார். பின்னர் வீட்டில் இருந்த சந்தியா அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கந்தன் காயமடைந்து விட்டதாக கூறியுள்ளனர். ஆனாலும் போலீசாரின் விசாரணையில் வசமாக சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.