இந்நிலையில், இரவு 11 மணிக்கு வீட்டின் அருகே கொளஞ்சியமும், செல்லத்துரையும் பேசிக்கொண்டிருந்தனர். இதை பார்த்து ஆத்திரமடைந்த மருமகன் அன்பழகன் வீட்டிலிருந்த டிராக்டரை வேகமாக ஓட்டிச் சென்று இருவர் மீதும் ஏற்றியுள்ளார். இதில், கொளஞ்சியம், செல்லத்துரை இருவரும் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.