பெங்களூருவில் உள்ள கோரமங்களாவில் உள்ள ஒரு உயரமான கட்டிடம் அருகே 28 வயது விமானப் பணிப்பெண் மர்மமான முறையில் இறந்து கிடைக்க போலீஸ் அப்பெண்ணின் காதலனை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் ஒரு சர்வதேச விமான நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிந்தார் என்றும், சமீபத்தில் துபாயில் இருந்து தனது காதலனை சந்திக்க வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் போலீசாரிடம் தெரிவித்தார். அவர்களிடம் சண்டை நடந்ததாகவும், அதைத் தொடர்ந்து அந்த பெண் கட்டிடத்தில் இருந்து விழுந்து இறந்ததாகவும் காதலன் போலீசாரிடம் கூறினார்.
இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த விமானப் பணிப்பெண், ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் காதலனை சந்திக்க வந்திருந்தார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, இந்த சம்பவம் நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றது. பலியானவர் குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து விழுந்தார். இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அந்த பெண் மாடியில் இருந்து கீழே விழுந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். பெண்ணின் காதலன் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருவரும் டேட்டிங் ஆப் மூலம் சந்தித்தனர். கடந்த 6 மாதங்களாக நெருங்கிய உறவில் இருந்தார்கள். சமீபகாலமாக அடிக்கடி சண்டை இருவருக்கும் உள்ளே ஏற்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு இருவரும் படம் பார்க்கச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது சண்டையில் ஈடுபட்டுள்ளனர். பிறகு இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.