சென்னையில் மஜாவாக நடந்த ஐடெக் விபச்சாரம்! கல்லா கட்டிய பிஸ்னஸ்க்கு ஆப்பு! சிக்கிய 19 வயது இளம்பெண் புரோக்கர்!

First Published | Mar 15, 2023, 12:33 PM IST

சென்னையில் தனியார் தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடத்திய 19 வயது இளம்பெண் மற்றும் வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்தைகள் கூறி அப்பாவி பெண்களை விபச்சாரத்தில் சில கும்பல் ஈடுபடுத்தி வருகிறது. 

இந்நிலையில், சென்னை எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதனையடுத்து, மப்டியில் பெண் போலீசார் அப்பகுதியை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, விடுதியில் பாலியல் தொழில் நடப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

இதையும் படிங்க;-  வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம்.. கல்லாகட்டிய அதிமுக பெண் முக்கிய நிர்வாகி கணவருடன் சிக்கினார்..!

Tap to resize

இதனையடுத்து, அந்த விடுதியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரி மாநிலம் சிவராந்தகம்பேட்டையை சேர்ந்த பெண் புரோக்கர் ஜெயப்பிரதா (19), தனது ஆண் நண்பரான கீழ்ப்பாக்கம் முதல் தெருவை சேர்ந்த பிரேம்தாஸ் (30) இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. வாஸ்ட் அப் குழு மூலம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இளம் பெண்கள் புகைப்படம் அனுப்பி பாலியல் தொழில் செய்து வந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. 

அதைதொடர்ந்து விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக பெண் புரோக்கர் ஜெயப்பிரியா, அவரது ஆண் நண்பர் பிரேம்தாஸ் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 இளம் பெண்கள் மீட்டகப்பட்டனர்.  மீட்கப்பட்ட 3 பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

இதையும் படிங்க;- சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்.. கல்லா கட்டிய பிஸ்னஸ்க்கு ஆப்பு வைத்த போலீஸ்.!

Latest Videos

click me!