நம்பி வந்த காதலி.. நண்பருக்கு விருந்தாக்கி ரசித்த காதலன்.. வெளியான பகீர் தகவல்..!

First Published | Jun 9, 2023, 11:22 AM IST

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து புருஷோத்தம் காதலிக்கு கொடுத்துள்ளார். மயக்கம் அடைந்த காதலியை முதலில் புருஷோத்தம் பலாத்காரம் செய்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தம். இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. சமீபத்தில் இளம்பெண்ணை பார்க்க புருஷோத்தம் துமகூருவுக்கு சென்றுள்ளார். அப்போது, மருத்துவக்கல்லூரி மாணவி வைத்திருந்த செல்போனை பயன்படுத்திவிட்டு கொடுப்பதாக கூறி புருஷோத்தம் வாங்கி கொண்டு பெங்களூருவுக்கு வந்து விட்டார். தனது செல்போனை கொடுக்கும்படி இளம்பெண் கேட்டு வந்துள்ளார்.

தனது செல்போனை மருத்துவக்கல்லூரி மாணவி கேட்ட போது, பெங்களூரு வந்து வாங்கிச் செல்லுமாறு புருஷோத்தம் கூறியுள்ளார். அதன்படி, அந்த இளம்பெண்ணும்  ஜூன் 6-ம் பெங்களூருவுக்கு வந்துள்ளார். இதையடுத்து கிரிநகரில் உள்ள தன்னுடைய நண்பர் சேத்தன் வீட்டுக்கு இளம்பெண்ணை புருஷோத்தம் அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து இளம்பெண்ணுடன் புருஷோத்தம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதற்கு இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 

Tap to resize

இதனையடுத்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து புருஷோத்தம் காதலிக்கு கொடுத்துள்ளார். மயக்கம் அடைந்த காதலியை முதலில் புருஷோத்தம் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் நண்பர் சேத்தனும் பலாத்காரம் செய்துள்ளார். மயக்கம் தெளிந்த மருத்துவக்கல்லூரி மாணவி வெளியில் ஓடிவந்து அலறி கூச்சலிட்டுள்ளார். 

அந்த மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  மருத்துவக் கல்லூரி மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, புருஷோத்தம், சேத்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காதலி என்று கூட பாராமல் நண்பருக்கு விருந்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos

click me!