ஓயாமல் உல்லாசத்துக்கு அழைத்த கல்லூரி மாணவன்! டார்ச்சர் தாங்க முடியாத இளம்பெண்! குடும்பத்துடன் செய்த பகீர்

First Published | Jun 8, 2023, 3:46 PM IST

தென்காசியில் கள்ளக்காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்டு கழிவுநீர்த் தொட்டியில் புதைத்த சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தென்காசி மாவட்டம் இலத்தூர் பகுதியை லட்சுமணன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும்போது அதில் மனித எலும்புக்கூடு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இலத்தூர்  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து எலும்புக் கூடாக மீட்கப்பட்ட நபர் யார்? அவரை கொலை செய்து கழிவுநீர் தொட்டியில் போட்டது யார்?  என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

tenkasi

அப்பகுதியில் காணாமல் போனவர்கள் நபர்கள் யாரேனும் உள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் மாடசாமி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. 

Tap to resize

இதனிடையே, லட்சுமணன் என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த திருமணமான பேச்சியம்மாள் என்பவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பிரியா, அவரது தாய் மாரியம்மாள் மற்றும்  அவரது சகோதரானான  கல்லூரி மாணவன் முத்துப்பாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. 

மதுவிற்கும், பிரியாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அவர்கள் தனிமையில் இருந்த போது அதை வீடியோவாக எடுத்து வைத்து பிரியாவை மிரட்டி மது அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அத்துடன் குடும்பத்தை விட்டு தன்னுடன் வராவிட்டால் வீடியோவை கணவரிடம் காட்டி விடுவேன் என்று மது மிரட்டியுள்ளார். இதனால் மதுவை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தனது தாய், தம்பி உதவியோடு செப்டிக் டாங்கில் உடலைபோட்டுவிட்டு கோவைக்கு குடும்பத்தோடு சென்றும் தெரிவித்துள்ளது.  

Latest Videos

click me!