இதனையடுத்து, சிறுவன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்;- தருமபுரி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன். தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். அப்போது ஹர்சாவுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில், ஹர்சாவுக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஓசூரில் வேலை செய்யும் இடத்தில் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த சிறுவனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.