கூல்ட்ரிங்க்ஸில் வோட்காவை கலந்து கொடுத்து காதல் மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கி ரசித்த கணவர்..!

First Published | Jul 19, 2023, 12:18 PM IST

குடிபோதையில் தாலி கட்டிய காதல் மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஆதிநாராயணன். கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஆதி நாராயணன் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இந்நிலையில், கடந்த  திங்கட்கிழமை இரவு குடிபோதையில் ஆதிநாராயணன் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகிய இருவரும் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது மகன் தூங்க சென்ற பிறகு ஆதிநாராயணன் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து வலுக்கட்டாயமாக குடிக்க வைத்துள்ளார். 

Tap to resize

rape

பின்னர், மயங்கி மனைவியை ஆதிநாராயணன் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் இருவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

இதுதொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். அப்படி இருந்த போதிலும்  பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Latest Videos

click me!