திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்புன்ராஜ். இவரது மனைவி ஜீவா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் மற்றும் 2 வயதில் ஒரு மகன் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜீவா பிரேம்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அவ்வப்போது தனிமையில் சந்தித்து வருகின்றனர். இந்த விவகாரம் தெரியவந்ததை அடுத்து ஜீவாவின் கணவர் அப்புன்ராஜ் பிரேம்குமாரை கண்டித்துள்ளார்.