சேலம் ஓமலூர் அருகே 25 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்காதலை துண்டித்ததால் பெண்ணை கொலை செய்த கூலித்தொழிலாளி, ஆந்திராவில் தலைமறைவாக இருந்தார். பல ஆண்டுகளாக போலீசாருக்கு போக்கு காட்டி வந்த அவர், தற்போது 60 வயதில் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உம்பிலிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி ராணி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நல்லதம்பி என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. இந்நிலையில் 2000ம் ஆண்டில் ராணி, நல்லதம்பியுடன் இருந்த தொடர்பை துண்டித்துள்ளார்.
24
ராணியை கொலை செய்த நல்லதம்பி
இதனால் ஆத்திரமடைந்த நல்லதம்பி தகராறில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் ராணியை கட்டையால் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தார். பின்னர் அங்கிருந்து தப்பித்து தலைமறைவானார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்து போலீசாருக்கு போக்கு காட்டி வந்தார். நீண்ட நாட்களாக கொலையாளி பிடிபடாமல் இருந்த நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சொந்த ஊரை விட்டு வெளியே சென்ற நல்லதம்பி 4, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு வந்து உறவினர்களை பார்த்து விட்டு செல்வது தெரியவந்தது.
34
25 ஆண்டுகளாக தலைமறைவு
இந்நிலையில் நேற்று, உம்பிலிக்கம்பட்டிக்கு வந்த நல்லதம்பியை (60) தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2000ம் ஆண்டில் கள்ளத்தொடர்வை துண்டித்ததால் ராணியை கொலை செய்து விட்டு, ஆந்திராவுக்கு தப்பிச் சென்றுள்ளார். அங்கு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து காலத்தை கடத்தி வந்துள்ளார்.
அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து, உறவினர்களை பார்த்துச்சென்றதாகவும், தற்போது சிக்கிக்கொண்டதாவும், போலீசில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 35 வயதில் கொலை செய்து விட்டு 25 ஆண்டுகள் கழித்து 60 வயதில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.