இதனால் ஜோதி, கள்ளக்காதலன் வெங்கடேசை தனது வீட்டுக்கு இனிமேல் வரவேண்டாம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு, ஜோதியின் வீட்டிற்கு வெங்கடேஷ் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த ஹரீஷ் எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள்? ஆவேசமாக கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ஜோதியும், ஹரீசும் சேர்ந்து கற்கள் மற்றும் கட்டையால் வெங்கடேசை சரமாரியாக அடித்தனர். இதில் வெங்கடேஷ் படுகாயமடைந்தார்.