கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே சானமாவு வனப்பகுதியில், கடந்த மார்ச் 19ம் தேதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் எரித்து கொலை செய்யப்பட்டது தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பிரகாஷ் (43) என்பது தெரியவந்தது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரியல் எஸ்டேட் போட்டியால் கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, சந்தேகத்தின் பேரில் அவரது மனைவி லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து, கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டதில் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில்;- பள்ளி நண்பரான சின்னராஜுடன்(38) எனக்கு நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தோம். இதனால், கணவருடன் என்னால் நெருக்கமாக இருக்க பிடிக்கவில்லை. ஆனால், எனது கணவர் பிரகாஷ், போதையில் வீட்டுக்கு வந்து எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார்.
கடந்த மார்ச் மாதம், அவ்வாறு தொந்தரவு கொடுத்ததால் ஆத்திரமடைந்த நான், அவரை கட்டையால் அடித்தேன். இதில் அவர் உயிரிழந்து விட்டார். பின்னர், காதலன் சின்னராஜூடன் சேர்ந்து கணவர் சடலத்தை வேனில் எடுத்துச் சென்று, சானமாவு காட்டில் தீ உடலை எரித்ததால் எங்களை கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்தோம்.
ஆனால், விசாரணையில் மாட்டிக்கொண்டோம் என்றார். இதையடுத்து லட்சுமி, அவரது காதலன் சின்னராஜ் ஆகிய 2 பேரையும், போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.