ப்ளீஸ் விட்டுடுங்க.. கதறியும் விடாமல் விடாமல் பலாத்காரம்! மாணவியை கர்ப்பமாக்கிய 65 வயது கிழவனுக்கு ஆப்பு.!

First Published | May 18, 2023, 12:31 PM IST

பள்ளி மாணவியை விரட்டி பலாத்காரம் செய்து  கர்ப்பமாக்கிய வழக்கில் 65 வயது முதியவருக்கு  20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவி நாமகிரிப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்த போது அதே பகுதியை சேர்ந்த வீரமுத்து(65) கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மாணவியை வீரமுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவததாக மிரட்டியே அடிக்க மாணவியை சீரழித்து வந்துள்ளார். இந்நிலையில் 2020ம் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது மாணவி ததிடீரென மயங்கி விழுந்தார். இதனால், பதறிப்போன ஆசிரியர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது. அன்றைய தினமே பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. 

Tap to resize

arrest

இதுதொடர்பாக சிறுமியின் தாய் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தத புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து வீரமுத்துவை கைது செய்தனர். 

இதுதொடர்பாக வழக்கு நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய முதியவர் வீரமுத்துவிற்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 5000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அபராதம் விதிக்கவில்லை என்றால் 6 மாதம் கூடுதலாக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!