எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலியுடன் உல்லாசம்.. தட்டிக்கேட்ட மனைவி.. இறுதியில் நடந்த பயங்கரம்..!

First Published | May 17, 2023, 2:44 PM IST

கள்ளக்காதலை கண்டித்த மனைவியை கணவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பபகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ள வடக்கு அழகு நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் மகாகிருஷ்ணன் (40). வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கனகாதேவி(32). இந்த தம்பதிக்கு முத்துலட்சுமி(14), கவின்(7) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மகாகிருஷ்ணனுக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். 

இந்நிலையில் மகாகிருஷ்ணனுக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதுகுறித்து அறிந்த கனாதேவி கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கணவன்-மனைவி இருவரும் ஒரே வீட்டில் வசித்தாலும் கடந்த 2 ஆண்டுகளாக பேசாமல் இருந்து வந்தனர்.

Tap to resize

இந்நிலையில், இந்த தம்பதிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதனால், ஆத்திரமடைந்த மகாகிருஷ்ணன் அரிவாளால் மனைவியை கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு முகத்தையும் அடையாளம் தெரியாதபடி சிதைத்து பிச்சிப்பூ தோட்டத்தில் உடலை வீசிவிட்டு தலைமறைவானார்.

 இதுகுறித்து தகவல் அறிந்த குருவிகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கணவரே கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, மகாகிருஷ்ணுவை போலீசார் கைது செய்தனர்.

Latest Videos

click me!