கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி. அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த மாணவி திடீரென மாயமானார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்தனர்.
அப்போது மாணவி அழுது கொண்டே வீட்டிற்கு வந்துள்ளார். இதுதொடர்பாக மாணவியிடம் பெற்றோர் விசாரித்த போது தான் சாலையில் சென்று கொண்டு இருந்தபோது சுங்கான்கடை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(21) என்பவர் இளைஞர் தன்னைக் கடத்தி சென்று வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். அவர் வெளியில் சென்ற நேரத்தில் தப்பித்து வந்ததாக சிறுமி கூறியுள்ளார். இதை கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் தெதாடர்பாக சிறுமியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து ஆரல்வாய்மொழி பகுதியில் பதுங்கி இருந்த மணிகண்டனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.