இந்நிலையில், கடந்த ஜூன் 8ம் தேதி செல்வபிரகாசம், கெருகம்பாக்கத்தில் இருக்கும் லாவண்யா வீட்டிற்கு தனது குழந்தையை பார்க்க சென்றார். அப்போது, வீட்டில் லாவண்யா இல்லை. ஆகையால், அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளார். அப்போது அக்கம்பக்கத்தினர் மகன் இறந்துவிட்டதாக சொன்ன தகவலை கேட்டு தந்தை அழுது கதறினார். இதனையடுத்து, குழந்தை இறந்த தகவலை தனக்கு தெரிவிக்காமல் குழந்தையை அடக்கம் செய்துவிட்டதாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், வேறு ஒருவருடன் மனைவி பழகி வருவதால் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.