தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகு சுந்தரபாண்டி (32). விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி புனித ஆனி எப்சிபா(29). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 8-ம் தேதி இரவு அழகு சுந்தரபாண்டி வெளியில் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த 2 மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அப்பகுதியினர் மீட்டு சுந்தரபாண்டியை விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சங்கரலிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில், அதே பகுதியை சேர்ந்த மாரிராஜூ என்பவருக்கும், புனித ஆனி எப்சிபாவிற்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த விவகாரத்தை அறிந்த கணவர் மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவரை போட்டு தள்ள மனைவி முடிவு செய்தார். அதன்படி, மதுரையை சேர்ந்த கூலிப்படையினருக்கு பணம் கொடுத்துள்ளனர். இதையடுத்து கூலிப்படையை சேர்ந்த 2 பேர் சுந்தரபாண்டியை வெட்டிக் கொலை செய்ய முயன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, புனித ஆனி எப்சிபா, மாரிராஜ், சரவணன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய கூலிப்படையினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.