இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மூதாட்டியின் மருமகன் அர்ஜுனன் என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது கஞ்சா போதையில் மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த அர்ஜுனன், மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மூதாட்டி மயங்கியதால் அர்ஜுனன் அங்கிருந்து தப்பிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அர்ஜுனன் கைது செய்யப்பட்டுள்ளார்.