உல்லாசத்து இடையூறு! குழம்பில் விஷம்! உடம்பில் மின்சாரம்! கணவன் துடிதுடித்து கொலை.. மனைவி சிக்கியது எப்படி?

First Published | Jun 12, 2023, 1:17 PM IST

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். 

நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சி கரியாம்பட்டி முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (33). தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கீர்த்தனா (30). இவர்களுக்கு ஜனஸ்ரீ (13), கவின் ஸ்ரீ (7) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கீர்த்தனாவுக்கும், சின்னவரகூர் கோம்பையைச் சேர்ந்த கதிரேசனுக்கும் (27) கடந்த ஓராண்டுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மோகன்ராஜை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி,  கடந்த 6ம் தேதி  மோகன்ராஜ் வீட்டில் 
இரவு வேலை முடிந்து வந்த கணவனுக்கு, சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். பின்னர், மயங்கி நிலையில் கணவர் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கதிரேசன், கீர்த்தனாவுடன் சேர்ந்து கொண்டு மோகன்ராஜ் வீட்டின் அருகே உள்ள மின்கம்பத்தில் இருந்து வயர் மூலம் மின்சாரம் எடுத்து அதை மோகன்ராஜ் உடலில் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்தனர். பின்பு மோகன்ராஜ் தற்செயலாக உயிரிழந்ததாக கூறி கீர்த்தனா நாடகம் ஆடியுள்ளார். 

Tap to resize


இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மனைவி கீர்த்தனாவும், கதிரேசனும் சேர்ந்து மோகன்ராஜை கொலை செய்தது தெரியவந்தது. மோகன்ராஜை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டதை அடுத்து மர்மச் சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், கீர்த்தனா மற்றும் கதிரேசனை நேற்று கைது செய்தனர். 

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த கொடூர சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Latest Videos

click me!