நண்பன்னு நம்பி வீட்டுக்குள்ள விட்டா இப்படியாடா பண்ணுவ? மனைவியுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த கணவர்..!

First Published | Jun 13, 2023, 9:51 AM IST

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நண்பனை வெட்டிக்கொலை செய்த சம்பவம் தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை பல்லவன் சாலை காந்தி நகரை சேர்நத்வர் பவுல்ராஜ் (23). பிரபல ரவுடியான இவர் மீது போக்சோ, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. அதே பகுதியை சேர்ந்த ரவுடி லோகேஷ் (26) என்பவருடன் பவுல்ராஜ் நண்பராக பழகி வந்துள்ளார். இதனால் லோகேஷ் வீட்டிற்கு பவுல்ராஜ் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது லோகேஷ் மனைவி சத்யாவுக்கும், பவுல்ராஜூக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது. இதனால் நண்பர் லோகேஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் ரவுடி பவுல்ராஜ் அவரது மனைவியுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் லோகேஷிற்கு தெரியவந்தது.

Tap to resize

இதுகுறித்து தனது மனைவி சத்யா மற்றும் நண்பர் பவுல்ராஜிடம் பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த 4ம் தேதி தனது மனைவியுடன் பவுல்ராஜ் உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து இருவரையும் லோகேஷ் கண்டித்துள்ளார். எவ்வளவு சொல்லியும் கேட்காததால் ஆத்திரமடைந்த லோகேஷ் பவுல்ராஜை ஓட ஓட சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தார். 

ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பவுல்ராஜை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பவுல்ராஜ் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் லோகேஷை கைது செய்தனர். 

Latest Videos

click me!