ஆசைவார்த்தை கூறி நினைக்கும் போதெல்லாம் இளம்பெண்ணுடன் உல்லாசம்! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய இளைஞர்

First Published | Jul 27, 2023, 1:38 PM IST

ஐ.டி. பெண் ஊழியரை ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துவிட்டு ஏமாற்றிய இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவையை சேர்ந்தவர் இளம்பெண் ஒருவர் துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கோவை பீளமேட்டில் உள்ள தொழில்நுட்ப பூங்காவில் ஐ.டி. ஊழியராக வேலை பார்த்து வருவதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூகவலைதளங்கள் மூலம் பன்னிமடையை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சக்தி தங்கவேல் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. பல்வேறு இடங்களில் சுற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி செல்போனில் என்னை தொடர்பு கொண்ட சக்தி தங்கவேல் தனக்கு உடல்நிலை சரியில்லை உதவி செய்ய வருமாறு அழைத்தார். இதனையடுத்து, பதறிக்கொண்டு அவரது வீட்டிற்கு சென்றேன். ஆனால், வீட்டில் யாரும் இல்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சக்தி தங்கவேல் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். அதேபோன்று நினைக்கும் போதெல்லாம் பலமுறை என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

Tap to resize

இதனால் நான் 2 மாதம் கர்ப்பமானேன். இதுகுறித்து நான் சக்தி தங்கவேலுவிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் யோசிக்காமல் கொள்ளாமல் கருவை கலைத்து விடு என்றார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் கருவை கலைக்க வில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். பின்னர், தன்னுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்துவிட்டார். எனவே ஆசைவார்த்தை கூறி என்னை நாசம் செய்து  கர்ப்பிணியாக்கிய சக்தி தங்கவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்தி தங்கவேலை கைது ெசய்து சிறையில் அடைத்தனர்.

Latest Videos

click me!