நான் இருக்கும் போது வேற ஒருத்தி கேக்குதா உனக்கு.. ஆத்திரத்தில் தாலி கட்டிய கணவனை துடிதுடிக்க கொன்ற மனைவி.!

First Published | Jul 27, 2023, 10:43 AM IST

கள்ளக்காதல் விவகாரத்தில் தாலி கட்டிய கணவரை கழுத்தை இறுக்கி கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

illegal love

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் சிங் (32). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி சத்யா (30). இந்த தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.  ரஞ்சித்குமார் சிங் பல பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

theni

இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19-ம் தேதி இரவு வீட்டில் ரஞ்சித்குமார் சிங் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துதுள்ளார். அப்போது, ஆத்திரத்தில் இருந்து வந்த மனைவி சத்யா தாலி கட்டிய கணவர் என்று கூட பாராமல் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யாவை கைது செய்தனர்.

இதையும் படிங்க;- எங்க மாமனாரும், மாமியாரும் வீட்ல இல்ல! வந்தா கணவனின் கதையை முடிச்சிடலாம்! நாடகமாடிய மனைவி! சிக்கியது எப்படி?

Tap to resize

court hammer

இதுதொடர்பான வழக்கு பெரியகுளம் கூடுதல் மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாததங்களும் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, அதில், குற்றம்சாட்டப்பட்ட சத்யாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். 

இதையும் படிங்க;- பாட்டி.. அம்மா கிட்ட சொன்னாலும் கண்டுக்கல.. என்ன அந்த மாமா கண்ட இடத்தில் கை வைத்து இப்படிலாம் பண்ணாரு.!

Latest Videos

click me!