மாமியாரை மடக்கிய மருமகன்! எவ்வளவு சொல்லியும் கேட்காத புருஷன்! அர்ச்சகருக்கு நடந்த ரத்த அபிஷேகம்! நடந்தது என்ன?

Published : Aug 26, 2023, 12:50 PM IST

மாமியார் முறை பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த கணவரை மனைவி சரமாரியாக குத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
14
மாமியாரை மடக்கிய மருமகன்! எவ்வளவு சொல்லியும் கேட்காத புருஷன்! அர்ச்சகருக்கு நடந்த ரத்த அபிஷேகம்! நடந்தது என்ன?

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்துள்ள அப்பாபிள்ளைசந்தை சேர்ந்தவர் சுவாமிநாதன்(34). கோயில் ஒன்றில் பூசாரியாக உள்ளார். இவரது மனைவி சுதா(32). இந்த தம்பதிக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்படுவது வழக்கம். 

24

இந்நிலையில் சுவாமிநாதனுக்கு பக்கத்து தெருவில் உள்ள மனைவியின் சித்தியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும்  கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் மனைவி சுதாவுக்கு தெரியவந்ததை அடுத்து அடிக்கடி தம்பதிக்கு இடையை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்படி இருந்த போதிலும் கள்ளக்காதலை சுவாமிநாதன் தொடர்ந்துள்ளார். 

34

இதனால், ஆத்திரமடைந்த சுதா தூக்கிக்கொண்டிருந்த கணவனை கத்தியால்  15 இடங்களில் சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் துடித்த சுவாமிநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

44

இதனிடையே கையில் ரத்தக்கறையுடன் சுதா சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நிலையத்தில் சரணடைந்தார். கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவனை மனைவி சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!

Recommended Stories