சென்னை மயிலாப்பூர் நொச்சிநகர் புதிய அவுசிங் போர்டு 6-வது பிளாக்கில் வசித்து வந்தவர் பிரசன்னா(38). இவர் நேற்று இரவு வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரசன்னாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.