திருச்சி உறையூர் வடிவேல் நகரில் வசித்து வந்தவர் நந்தகுமார் (32). இவர் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி. இவருடைய மனைவி ஜெயசித்ரா (47). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நந்தகுமாருக்கும், ஜெயசித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
நாளடைவில் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவர் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது. இதை கைவிடும் படி கூறி வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், இரு குடும்பத்தார் தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததால் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்ய முடிவு எடுத்தனர்.
suicide
அதன்படி நேற்று முன்தினம் இரவு நந்தகுமார், ஜெயசித்ராவை தனது வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர், அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். நீண்ட நேரமாகியும் நந்தகுமார் வீடு திறக்கப்பட்டாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர். அப்போது இருவரும் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.