சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன். அப்பகுதியில் உள்ள வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வந்துள்ளார். வழக்கம் போல கடந்த 14ம் தேதி வேலைக்கு சென்ற சிறுவன் மீண்டும் திரும்பவில்லை. இதனால், பதற்றம் அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சிறுவனுடைய செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.