சென்னை மெரினாவில் பயங்கரம்! சினிமா பாணியில் கூலிப்படை தலைவன் படுகொலை! அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்.!

Published : Aug 19, 2023, 07:52 AM IST

சென்னையை கலக்கிய கூலிப்படை தலைவனும் புளியந்தோப்பு ரவுடியுமான ஆற்காடு சுரேஷ் பொதுமக்கள் மத்தியில் ஓடஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
14
சென்னை மெரினாவில் பயங்கரம்! சினிமா பாணியில் கூலிப்படை தலைவன் படுகொலை! அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்.!

சென்னை புளியந்தோப்பு நரசிம்ம நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் என்ற ஆற்காடு சுரேஷ்(44). பிரபல ரவுடியான இவர் மீது ராதாகிருஷ்ணன், சின்னா மற்றும் வழக்கறிஞர் பகத்சிங் கொலை வழக்கு உட்பட 6 கொலை வழக்கு, 25 கொலை முயற்சி,  வழிபறி, ஆட்கடத்தல் என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 8 முறை போலீசார் குண்டர் சட்டத்தில் ஆற்காடு சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

24

இந்நிலையில் கொலை வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேஷ் எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஆஜராக ஆற்காடு சுரேஷ் தனது நண்பரான வழக்கறிஞர் மது என்பவருடன் நீதிமன்றத்திற்கு வந்தார். இதனை தொடர்ந்து, மதுவுடன் காரில் சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீனவன் உணவகம் என்ற ஓட்டலுக்கு வந்தார். கடற்கரை மணலில் அமர்ந்து ரவுடி சுரேஷ் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். 

34
murder

அப்போது காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்து இறங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஆற்காடு சுரேஷை சரமாரியாக வெட்டினர். தடுக்க முயன்ற நண்பருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதை ஓட்டலில் அமர்ந்து சாப்பிட்டு  கொண்டிந்தவர்கள் மற்றும் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். 

44
shivamogga crime

இதனையடுத்து அந்த கும்பல் எந்த ஒரு அச்சமும் இல்லாமல் சாவகாசமாக அங்கிருந்து காரில் ஏறி தப்பித்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆற்காடு சுரேஷை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பழிக்குப்பழி கொலை செய்யப்பட்டாரா அல்லது ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!

Recommended Stories