நண்பனின் மனைவியை கரெக்ட் செய்து உல்லாசம்.. நேரில் பார்த்த கணவர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்..!

Published : Jun 22, 2023, 03:53 PM ISTUpdated : Jun 22, 2023, 10:41 PM IST

உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவரை அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். 

PREV
15
நண்பனின் மனைவியை கரெக்ட் செய்து உல்லாசம்.. நேரில் பார்த்த கணவர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்..!
illegal love

கர்நாடக மாநிலம் சட்டரகி கிராமத்தில் வசித்து வந்தவர் சைபான். இவரது மனைவி ராஜ்மா. இவரது நண்பர் அப்பாஸ் அலி. நண்பன் என்ற முறையில் சைபானின் வீட்டுக்கு அப்பாஸ் அலி அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதனால், ராஜ்மாவுக்கும் அப்பாஸ் அலிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் வெளியில் சென்ற நேரத்தில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

25

இந்நிலையில், கடந்த மே மாதம் 10-ம் தேதி சைபான் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக மனைவி ராஜ்மா நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுது கதறினார். இதனையடுத்து, போலீசாருக்கு தெரிவிக்காமல் சைபானின் உடல் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. கணவர் இறந்த நிலையில் அவரது நண்பர் ராஜ்மா வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். 

35

இதனால், சந்தேகம் அடைந்த சைபான் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து அப்பாஸ் அலி மற்றும் ராஜ்மாவிடம் கிடுக்குப்பிடி  
விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. கடந்த மே மாதம் 10-ம் சைபான் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது நண்பர் அப்பாஸ் அலியும், மனைவி ராஜ்மாவுடன் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால், ஆத்திரமடைந்த கணவர் இருவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 

45

வசமாக கணவரிடம் சிக்கியதால்  செய்வதறியாது திகைத்து நின்ற ராஜ்மாவும், அப்பாஸ் அலியும் சேர்ந்து சைபானை சரமாரியாக தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து சைபானின் உடலை தூக்கில் தொங்கவிட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார்.

55

இந்த சம்பவம் தொடர்பாக  அப்பாஸ் அலி, ராஜ்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தாலி கட்டிய கணவரை மனைவியை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!

Recommended Stories