இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வாகன விபத்தில் பெரியசாமி இறந்தும் பிரேமாவுக்கு சிறு காயம் ஏற்படாதது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பிரேமாவின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், தருமபுரி மாவட்டம் நாட்ராம்பள்ளி பகுதியை சேர்ந்த நந்திகேசவன் (28) என்பவருடன் அடிக்கடி பேசியதும், அவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.