அதன்படி நேற்று முன்தினம் மெஹ்ராஜூதின் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது தனது ஆண் நண்பருடன் சேர்ந்து அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். பின்னர், இருவரும் அங்கிருந்து தப்பித்துள்ளனர். இந்தத சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஷாமா, அகீப் ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.