கள்ளக்காதலனை தவிக்கவிட்டு புருஷனோடு சென்ற கள்ளக்காதலி.. ஏக்கத்தில் இருந்த வாலிபர் என்ன செய்தார் தெரியுமா?

First Published | Nov 7, 2023, 9:49 AM IST

தெருவிளக்கு வயரை அறுத்து  தனக்கு தானே மின்சாரத்தை பாய்ச்சி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு அருகே ராமதண்டலம் கிராமத்தில் உள்ள ஏரி அருகே இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இறந்து கிடந்தவர் காஞ்சிபுரம் மாவட்டம் பாக்குப்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன்(45) என்பதும் கள்ளக்காதலியை அழைத்துக்கொண்டு ராமதண்டலம் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக வீடின்றி ஆங்காங்கே சுற்றிவந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை பற்றி விசாரித்தபோது கள்ளக்காதலி கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது கணவருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

Tap to resize

இதன்காரணமாக வெங்கடேசன் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில்,  ராமதண்டலம் ஏரியில் அமைக்கப்பட்டிருந்த தெரு மின்விளக்கின் வயரை அறுத்து தனக்கு தானே மின்சாரத்தை பாய்ச்சி கொண்டு அவர் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது. 

Latest Videos

click me!