பொண்டாட்டி இருக்கும் போதே மாமியாரை மடக்கிய மருமகன்.. விஷயம் தெரிந்த மைத்துனர்! இறுதியில் நடந்தது என்ன?

First Published | Sep 29, 2023, 12:56 PM IST

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கொலை செய்து தற்கொலை செய்து கொண்டது போல் தண்டவாளத்தில் உடலை வீசிய சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Train

நாகை மாவட்டம் நல்லியான் தோட்டம் பகுதியில் கடந்த 19ம் தேதி ரயில் தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.  இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் நாகை காடம்பாடி திரவுபதியம்மன் கோவிலை சேர்ந்த பெயின்டர் கலியபெருமாள் (27) என்பதும் கத்தியால் கழுத்தை வெட்டி கொலை செய்து சடலத்தை ரயில் பாதையில் வீசியது தெரிய வந்தது. 

Tap to resize

மேலும், கலியபெருமாள் தன் மனைவி ஹேமாஸ்ரீயை தினமும் குடிபோதையில் தாக்கியதுடன், மாமியாருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதையறிந்து, ஆத்திரமடைந்த ஹேமாஸ்ரீ சகோதரர் சூரியகிருபா, நண்பர் கார்த்திக் என்பவருடன் சேர்ந்து கலியபெருமாளை கொலை செய்து, ரயிலில் அடிபட்டு இறந்தது போல் காட்ட தண்டவாளத்தில் உடலை வீசியது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Latest Videos

click me!