திண்டுக்கல்லில் பயங்கரம்.. திமுக நிர்வாகி கொடூரமாக வெட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!

Published : Jul 21, 2023, 09:06 AM ISTUpdated : Jul 21, 2023, 09:36 AM IST

திண்டுக்கல்லில் திமுக மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் பட்டறை சரவணன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
14
திண்டுக்கல்லில் பயங்கரம்.. திமுக நிர்வாகி கொடூரமாக வெட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!
dindigul

திண்டுக்கல் குமரன் திருநகரை சேர்ந்தவர் சரவணன் (எ) பட்டறை சரவணன் (35). திண்டுக்கல் மாநகர கிழக்கு பகுதி திமுக மாணவரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி,  ஒரு பெண் குழந்தை உள்ளது. 

24

இந்நிலையில், சரவணன் நேற்று இரவு திண்டுக்கல் அண்ணாநகர் சவுக்கு தோப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்து சரவணனை சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சரவணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றது. 

34
dindigul

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

44

ஆளுங்கட்சி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட சரவணன் மீது கொலை, ஆள் கடத்தல், அடிதடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read more Photos on
click me!

Recommended Stories