இதனையடுத்து பெண் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அந்த மூன்று பெண்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். போதை தெளியவைத்து விசாரணை நடத்தியதில் 3 பேரும் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் என்றும், அவர்கள் திருவல்லிக்கேணி பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் உணவு பரிமாறுவதற்காக வேலைக்கு வந்தததாகவும், வேலை முடிந்த கையோடு மூக்கு முட்ட குடித்து விட்டு போதையில் சாலையில் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது.