ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை அடுத்த சென்னம்மா சர்க்கிள் பகுதியில் வசித்து வந்தவர் பிரசாத். இவரது மகன் சரவணன். ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், சரவணனுக்கும் தெலுங்கானா மாநிலம் வனப்பர்த்தி பகுதியை சேர்ந்த ருக்மணி என்ற பெண்ணுடன் கடந்த 1ம் தேதி திருமணம் நடந்தது.
சம்பிரதாயம் படி முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், முதல் நாளிலேயே சரவணனுக்கு தாம்பயத்தில் ஈடுபடாமல் விலகியே இருந்துள்ளார். மறுநாளும் இதுபோன்று இருந்துள்ளார். இதுகுறித்து ருக்மணி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் மருமகனுக்கு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஆண்மை பரிசோதனை மேற்கொண்டனர்.
அதுமட்டுமல்லாமல் மகளுக்கு முதலிரவு நடக்காதது குறித்து அக்கம் பக்கத்தில் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சரவணன், தனது பெற்றோருக்கு நடந்த விஷயங்களைத் தெரிவித்துள்ளார். தனது மகனை அசிங்கப்படுத்திய கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி கர்னூலில் உள்ள தங்கள் வீட்டிற்கு வரும்படி எல்லோரையும் அழைத்து இருக்கிறார். அதன்படி ருக்மணியும், சரவணனும் அங்கு சென்று இருக்கிறார்கள். அவர்களுடன் ருக்மணியின் தந்தை வெங்கடேஸ்வரலுவும் தாய் ரமாதேவியும் சென்று இருக்கிறார்கள்.
வீட்டிற்கு சென்றதும் சரவணன் தன் மனைவி ருக்மணியை மாடிக்கு அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், சரவணின் பெற்றோர் ருக்மணியின் தாய், தந்தையை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில், தாய் ரமாதேவி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். படுகாயங்களுடன் தந்தை வெங்கடேஸ்வரலு உயிர் தப்பித்தார்.
பின்னர், வெளியே ஓடிய வெங்கடேஸ்வரலு போட்ட அலறியதை அடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரவணன் மற்றும் அவரது தந்தை பிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.