அப்போது, 5 பேர் வந்து கதவை தட்டியுள்ளனர். கங்கா கதவை திறந்து பார்த்த உடனே அந்த கும்பல் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த கங்கா அலறி கூச்சலிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கும்பல் அவரை கடுமையாக தாக்கி கை, கால்களை கட்டி, வாயில் துணி வைத்து அடைத்துள்ளனர். பின்னர், அந்த கும்பல் பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகைகள், ரூ.60 ஆயிரம் கொள்ளையடித்துள்ளனர். பின்னர், கங்காவை நிர்வாணப்படுத்தி அதை செல்போனில் வீடியோ எடுத்து சென்றுள்ளனர்.