தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும், டெல்லி நொய்டாவை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த ஜூன் 26ம் தேதி பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, முதலிரவு அறையில் மணப்பெண் சென்ற நிலையில் திடீரென அவருக்கு வயிறு வலிப்பதாக கூறியுள்ளார்.
baby
இதனால் பதறிய கணவர் மனைவியை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாகவும், பிரசவ வலி ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர். இதனை சற்றும் எதிர்பாராத கணவர் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மறுநாள் அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மணமகனின் குடும்பத்தினர் பெண்ணின் பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மகள் கர்ப்பமாக இருப்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்றும் அவரது வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதனை மறைத்து அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்து விட்டோம் என்றனர்.
மேலும் நீங்கள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மாப்பிள்ளையிடம் கெஞ்சினர். ஆனால், மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் இளம்பெண்ணை ஏற்க மறுத்துவிட்டனர். இளம்பெண் மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு அவரது பெற்றோர்கள் புறப்பட்டு சென்றனர். திருமணம் முடிந்த அடுத்த நாளே மணமகள் குழந்தை பெற்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.