தம்பி சமாதியில் பட்டா கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்.! அண்ணனை அலேக்கா தூக்கிய போலீஸ்.!

Published : Jan 05, 2026, 05:17 PM IST

ஸ்ரீபெரும்புதூர் அருகே, சரித்திர பதிவேடு குற்றவாளியான தனது தம்பியின் பிறந்தநாளை, அவனது சமாதியில் வீச்சரிவாளால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் அண்ணன் ஐயப்பன். இந்தக் கொண்டாட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

PREV
13

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சந்த வேலூர் EB காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது சுங்குவார்சத்திரம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொள்ளை என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா போதையில் ஆட்டோ ஓட்டி சென்றபோது மப்பேடு அருகே விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

23

இந்நிலையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய ராஜ்குமாரின் அண்ணன் ஐயப்பன். இவர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய குற்ற சரித்திர பதிவேடு குற்றவாளியான ஜி.கே. எண்டர்பிரைசஸ் உரிமையாளர் நெமிலி பகுதியை சேர்ந்த கார்த்தியிடம் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜ்குமாரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக தம்பியின் சமாதிக்கு சென்று சமாதியின் நடுவே BIRTHDAY CAKE வைத்து தனது கையில் வைத்திருந்த பெரிய வீச்சரிவாளால் கேக்கை வெட்டி, ஐயப்பன் தனது தம்பியின் பிறந்த நாளை கொண்டாடினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

33

வீடியோ வைரலானதை அடுத்து சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் தாமாக முன்வந்து ஐயப்பனை கைது செய்தனர். பின்னர் ஐயப்பன் பதுக்கி வைத்திருந்த வீச்சரிவாள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories